14ஆம் மாடியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த வித்தியாசமான விலங்கு
கட்டடத்தின் 14ஆம் மாடியில் வீடு...
வீட்டிற்குள் பல்லிகள் செல்லலாம்...பூச்சிகள் செல்லலாம்...பறவைகள்கூட செல்லலாம்...
வித்தியாசமாக civet என்ற விலங்கு சென்றுள்ளது...
ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்திலுள்ள வீட்டின் மாடத்தில் அது காணப்பட்டதாக விலங்குப் பராமரிப்பு, ஆய்வு அமைப்பு (ACRES) Facebookஇல் சொன்னது.
அது பகிர்ந்துகொண்ட காணொளியில் civet மாடத்தின் கூரைப்பகுதியில் இருப்பதைக் காணமுடிகிறது.
அதிகாரிகள் அதனைத் தரையில் இறங்கவைக்க ஒரு குடையையும் துடைப்பத்தையும் பயன்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது.
civet திடீரென்று கூரைப் பகுதியிலிருந்து தரையில் குதிக்கிறது.
அது பின்னர் வீட்டிற்குள் ஓடுகிறது.
விலங்குகள் மனவுளைச்சலைச் சந்திக்கும்போது அவை தப்பிக்க முனையலாம். civet மாடத்தை விட்டுக் கீழே விழுந்துவிடும் சாத்தியம் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
விலங்கைக் காப்பாற்ற கவனத்துடன் செயல்படவேண்டியிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
civet தற்போது பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டுள்ளது.