கிளமெண்டி ரோட்டில் தீப்பிடித்த வாகனம்
வாசிப்புநேரம் -
கிளமெண்டி ரோட்டில் (Clementi Road) இன்று தீச்சம்பவம் ஏற்பட்டிருக்கிறது.
மதியம் சுமார் 2.55 மணிக்குச் சம்பவத்தைப் பற்றித் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை 'செய்தி'யிடம் கூறியது.
கனரக வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. கரும்புகையைச் சுவாசித்த ஒருவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
கிளமெண்டி ரோட்டின் அருகே இருந்தவர்கள் வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதாக 8world செய்தித்தளம் தெரிவித்தது.
தீயணைப்புக் கருவியைக் கொண்டு தீயை அணைத்துவிட்டதாகத் தற்காப்புப் படை 'செய்தி'யிடம் கூறியது.
ஏன் தீ மூண்டது என்ற காரணம் தெரியவில்லை. விசாரணை தொடர்கிறது.

தொடர்புடையது:
ஆதாரம் : Others/8world