வெப்பமும் வெள்ளமும்… பொருளாதாரத்துக்கு ஆபத்து
(படம்: Pixabay)
பருவநிலை மாற்றங்களால் பொருளாதார நட்டங்கள் அதிகரிக்கும் என்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் Impact Investing and Practices எனும் நிலையம் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
புதிய அறிக்கை ஆசியாவின் பருவநிலை மாற்றங்களை மையமாகக்கொண்டுள்ளது.
2021 முதல் சென்ற ஆண்டு வரை 100 பில்லியன் டாலருக்கு மேற்பட்ட நிதியை நிலையம் ஆய்வு செய்துள்ளது.
ஆசியாவில் பருவநிலை மாற்றத்தின் தொடர்பில் ஆபத்துகள் அதிகரிக்கும் வேளையில் அறிக்கை வெளியாகியிருக்கிறது.
கடும் வெப்பம் நாட்டின் கட்டமைப்பைப் பலவீனமாக்குகிறது.
வெள்ளம், புயல் போன்ற திடீர்ப் பேரிடர்கள் பல தொழில்துறைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.
வேளாண்மை, உணவுத்துறைகளும் பட்டியலில் உள்ளன.
பருவநிலைக்கேற்ற மாற்றங்கள், அவற்றிலிருந்து மீளுதல் ஆகியவற்றுக்கான நிதியை அதிகரிக்காவிட்டால் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்கும்போது வர்த்தகங்கள் பாதிக்கப்படும்.
அதன் தொடர்பில் அந்த அறிக்கை 250க்கும் அதிகமான தீர்வுகளை முன்வைத்துள்ளது.