Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பருவநிலை அறிவியலைப் புரிந்துகொள்வது முக்கியம் - வலியுறுத்தும் சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் அமைச்சர்கள், பருவநிலை அறிவியலைப் புரிந்துகொள்வது, அதில் முதலீடு செய்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை  ஐக்கிய நாட்டு நிறுவனத் தண்ணீர்க் கருத்தரங்கில் வலியுறுத்தியுள்ளனர். 

நியூயார்க்கில் நடைபெற்ற கருத்தரங்கில், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu)பேசினார்.

பருவநிலை மாற்றத்தால், சிங்கப்பூர் போன்ற கடலோர நகரங்கள் பாதிக்கப்படும் ஆபத்து அதிகமிருப்பதை அவர் சுட்டினார். 

அதன் காரணமாகவே, பருவநிலை அறிவியலில் சிங்கப்பூர் முதலீடு செய்கிறது. பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் சிங்கப்பூரின் திட்டங்களும் அதுபற்றிய ஆய்வுகளும் எல்லைதாண்டிய முயற்சிகளுக்குப் பங்களிக்கும் என்று திருவாட்டி ஃபூ தெரிவித்தார். 

பருவநிலை மாற்றத்தால் நேர்ந்துவரும் கடும் மழை, வெள்ளம் முதலிய பேரிடர்களைத் தவிர்க்க, துணிச்சலான கூட்டு நடவடிக்கைகள் அவசியம் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கூறினார்.

கொள்கைகளை வகுக்கும்போதும், தலைமுறை தாண்டி நீடிக்கும் மாற்றங்களை அறிமுகம் செய்யும்போதும் பருவநிலை அறிவியலைப் புரிந்துகொள்வதன் மூலம் பலவற்றைச் சாதிக்க முடியும் என்று திரு. தர்மன் சொன்னார். 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்