Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் மருந்தகங்களில் மீண்டும் அதிகரிக்கும் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் மருந்தகங்களில் COVID-19 கிருமித்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.   

Healthway Medical குழுமத்தின் டாக்டர் ஜான் செங் (John Cheng) தமது மருந்தகத்தில் கடந்த இரண்டு வாரத்தில் கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்திருப்பதாகக் கூறினார்.  

முன்பு பரவிய கிருமித்தொற்றால் அதிகமானோர் திடீரென பாதிக்கப்பட்டனர். அதனால் அதைச்சமாளிக்க மருந்தகங்கள் சிரமப்பட்டன என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் கிருமித்தொற்று இம்மாதம் (ஜூலை 2022) அல்லது அடுத்த மாதம் (ஆகஸ்ட் 2022) உச்சத்தை எட்டும் என்பதால் இப்போதைக்கு எதையும்  உறுதியாகக் கூற இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

சுகாதாரஅமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) கடந்த மாதம் (ஜூன் 2022) சிங்கப்பூரில் புதிய ஓமக்ரான் கிருமித்தொற்றுக் கிருமிகளான BA4, BA5 ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் பரவக்கூடும் என்று கூறியிருந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்