Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தில் சுமார் 27 கிலோகிராம் கொக்கெய்ன் பறிமுதல் - 5 வெளிநாட்டுப் பெண்கள் கைது

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்தில் உள்ள இடைவழிப் பகுதியில் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தில் 5 வெளிநாட்டுப் பெண்கள் நேற்று முன்தினம் (29 ஜூலை) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 21 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் இரு பெண்கள் பயணப்பெட்டிகளை மாற்றிக்கொள்வதைப் பார்த்திருக்கின்றனர்.

அதன் பின்னர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 5 பெண்களையும் கைதுசெய்தனர். அவர்களது உடைமைகளைச் சோதனை செய்தபோது சுமார் 27 கிலோகிராம் எடைகொண்ட கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் சேர்த்து 10 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட கொக்கெய்ன் விளையாட்டுப் பொருள்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

30 கிராமுக்கு மேலான கொக்கெய்னைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.
படம்: CNB
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்