Skip to main content
உச்சத்தில் COE
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உச்சத்தில் COE

வாசிப்புநேரம் -
உச்சத்தில் COE

(கோப்புப் படம்: CNA/Lan Yu)

சிங்கப்பூரில் கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் (COE) உயர்ந்துள்ளன.

சிறிய கார்களுக்கான கட்டணம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சிறிய கார்களின் கட்டணம் 3,365 வெள்ளி கூடி 107,889 வெள்ளியானது.

முன்னதாக அக்டோபர் 2023-இல் அந்தத் தொகை ஆக அதிமாக 106,000 வெள்ளியை எட்டியிருந்தது.

சிறிய கார்களுக்கான கட்டணம் -
முன்னர்: $104,524
இப்போது: $107,889

பெரிய கார்களின் கட்டணம் $3,101 ஏற்றம் கண்டது.

முன்னர்: $124,400
இப்போது: $127,501

பொதுப்பிரிவு வாகனக் கட்டணம் $2,900 கூடியது.

முன்னர்: $125,001
இப்போது: $127,901

வர்த்தக வாகனக் கட்டணம் $634 குறைந்தது.

முன்னர்: $72,190
இப்போது: $71,556

மோட்டார் சைக்கிள் கட்டணம் $292 உயர்ந்தது.

முன்னர்: $8,809
இப்போது: $9,101

ஏலத்தில் மொத்தம் 3,144 வாகன உரிமைச் சான்றிதழ்கள் ஒதுக்கப்பட்டன.

அவற்றுக்குச் சுமார் 4,553 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்