Skip to main content
பானங்களின் விலையை உயர்த்திய கடை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பானங்களின் விலையை உயர்த்திய கடை - கொந்தளிக்கும் இணையவாசிகள்

வாசிப்புநேரம் -
பானங்களின் விலையை உயர்த்திய கடை - கொந்தளிக்கும் இணையவாசிகள்
(படம்: Facebook/Hawkers United - Dabao 2020)
சீனப் புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தக் காலக்கட்டத்தில் சில கடைகள் பொருள்களின் விலையை உயர்த்துவதுண்டு.

ஆனால் அங் மோ கியோவில் காப்பிக் கடை ஒன்று பானங்களின் விலையை உயர்த்தியதால் இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்தக் கடை, காப்பி உள்ளிட்ட பானங்களின் விலையை 30 காசும், மதுபானத்தின் விலையை 50 காசும் உயர்த்துவதாக அறிவித்தது எனச் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது.

சுமார் 3 மணிநேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் அதில் கருத்துத் தெரிவித்ததாக 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.

சீனப் புத்தாண்டின் முன்தினத்திற்கு முன்னதாகவே விலையை ஏற்றியது நியாயமா எனச் சில இணையவாசிகள் கேள்வி எழுப்பினர்.

அதுவும் பானங்களின் விலையை 30 காசு ஏற்றியது சரிதானா என்றும் அவர்கள் வினவினர்.

ஆனால் அதற்கு வேறு சிலர் மாற்றுக் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

"ஆண்டுக்கு ஒரு முறைதானே அத்தகைய விலையேற்றம் வருகிறது; அதற்கு ஏன் இவ்வளவு அதிர்ச்சி அடையவேண்டும்?," என அவர்கள் கேட்கின்றனர்.

மேலும் விலை அதிகம் என்று தோன்றினால் வேறு கடைகளுக்குச் செல்லலாம். இதைப் பெரிதுபடுத்த அவசியமில்லை என்றும் கூறினர்.
 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்