"நான் என்ற எண்ணத்தை மாற்றி நாம் எனும் உணர்வை வெளிப்படுத்த வேண்டும்"
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: Youtube/Prime Minister's Office
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிக்கலாகிவரும் உலகில், சமூகங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமையும் ஒருமைப்பாடும் சிங்கப்பூரை நீண்ட காலத்துக்குச் செழிப்பாக வைத்திருக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
எல்லா சமூகத்துக்கும் சிங்கப்பூரில் இடமுண்டு.
எல்லாப் பிரிவினருக்கும் இடையே உள்ள நம்பிக்கையை எல்லாத் தலைமுறைகளும் கட்டிக்காக்க வேண்டும் என்றார் பிரதமர்.
சிங்கப்பூரர்கள் 'நான்' என்ற எண்ணத்தை மாற்றி 'நாம்' எனும் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
பல்லினச் சமுதாயம் எனும் குடியரசின் நற்பெயரை நிலைநாட்ட அது உதவும் என்று திரு வோங் கூறினார்.
இஸ்லாமியச் சமயத் தலைவர்களின் தொண்டூழியக் கட்டமைப்பை அறிமுகம் செய்துவைத்துப் பிரதமர் பேசினார்.
கட்டமைப்பின் கீழ் இஸ்லாமியச் சமய ஆசிரியர்களும் தலைவர்களும் எல்லா வயது சிங்கப்பூரர்களுக்கும் சேவையாற்றுவர்.
சிறைத் தண்டனை அனுபவிப்பவர்கள் அவர்களின் குடும்பங்கள் ஆகியோருக்கும் உதவி வழங்கப்படும். மன நல ஆதரவும் நல்கப்படும்.

ஆதாரம் : Others