Skip to main content
மலக்குடல் வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவது இன்னும் சுலபமாகிறது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மலக்குடல் வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவது இன்னும் சுலபமாகிறது

வாசிப்புநேரம் -
மலக்குடல் வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவது இன்னும் சுலபமாகிறது

Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில், மலக்குடல் வாய்ப் புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனைக் கருவிகளை வழங்கும் தானியக்க முகப்புகள் விரைவில் தீவு முழுவதும் அறிமுகப்படுத்தப்படக்கூடும்.

அதன் மூலம், பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே சுயமாகப் பரிசோதனை மேற்கொள்ளலாம்.

முகப்புகளில் இருந்து கருவிகளைப் பெற்றுக்கொண்ட பத்தில் ஏழு பேர் பரிசோதனையைச் செய்துகொண்டதாக முன்னோடி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஆண்கள், பெண்கள் இருவரிடமும் அதிகம் காணப்படும் புற்றுநோய்களின் பட்டியலில் பெருங்குடல் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இருப்பினும் பரிசோதனை மேற்கொள்வோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

பிடோக்கில் நடத்தப்பட்ட முன்னோடி ஆய்வில், 50 முதல் 85 வயதுக்கு உட்பட்ட 350 பேர் பங்கேற்றனர்.

முதலில் பங்கேற்பாளர்கள் QR குறியீட்டை வருடிப் பரிசோதனைக்குத் தகுதி பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்துகொண்டனர்.

பின்னர் பாதுகாப்பான இணையத்தளத்தில் விவரங்களைப் பதிவு செய்தனர்.

முகப்பில் இரண்டு பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்டன.

அவர்கள் வீட்டிலேயே பரிசோதனையை மேற்கொண்டனர்.

கருவிகளை அஞ்சல்வழி திருப்பி அனுப்பியவர்களில், சுமார் ஒன்பது விழுக்காட்டினருக்கு நோய் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக சிங்ஹெல்த் தெரிவித்தது.

நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது.

வீட்டுக்கு அருகிலேயே கருவிகளைக் கொண்டு செல்லும் முயற்சிகள் தொடர்கின்றன.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்