தொகுதி எல்லை மாற்றங்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகள்
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: CNA/Hanidah Amin)
தொகுதி எல்லைகள் மறுஆய்வுக்குழு அதன் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தங்களுடைய Facebook பக்கத்தில் அதனைப் பதிவிட்டனர்.
தற்போதைய பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தியோ சீ ஹியென் (Teo Chee Hean) அவர்களில் ஒருவர்.
"பொங்கோல், பாசிர் ரிஸ் வட்டாரங்களில் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் தொகுதி எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன." என்றார் திரு தியோ.
இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் பாசிர் ரிஸ்-சாங்கி, பொங்கோல் ஆகியவை புதிய குழுத்தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தாங்கள் சாங்கி குடியிருப்பாளர்களை வரவேற்பதாகத் திரு தியோ சொன்னார்.
தொடர்ந்து குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்றவிருப்பதாய் அவர் குறிப்பிட்டார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில் யூஹுவா தனித்தொகுதி இணைய மறுஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளதை யூஹுவா தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிரேஸ் ஃபூ குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் தனித்தொகுதியின் ஒருபகுதி ஜுரோங் செண்ட்ரல் தனித்தொகுதியில் சேரவுள்ளது.
தனித்தொகுதியில் மாற்றங்கள் வந்தாலும் தாம் தம்முடைய குடியிருப்பாளர்கள் மீது கொண்டுள்ள கடப்பாடு மாறாது என்றார் திருவாட்டி ஃபூ.
புதிய ஜுரோங் செண்ட்ரல் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதி எல்லைகளில் மாற்றம் வந்தாலும் தாம் குடியிருப்பாளர்களைப் பிரதிநிதிப்பதிலும்
சேவையாற்றுவதிலும் மாற்றம் இருக்காது என்று தற்போதைய ஜூரோங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியே யாவ் சுவென் (Xie Yao Quan) தம்முடைய Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : Others/social media