Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் புதிய குளிர்பதனக் கூடத்துக்கான நிலந்திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் CKL எனும் Commonwealth Kokubu Logistics நிறுவனம் புதிய குளிர்பதனக் கூடத்துக்கான நிலந்திருத்தும் பணியைத் தொடங்கியுள்ளது.

Commonwealth Capital நிறுவனமும் ஜப்பானின் Kokubu குழுமமும் இணைந்து புதிய கூடத்தை அமைக்கின்றன.

சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் உள்ள சில்லறை உணவு வர்த்தகர்கள், உணவுச் சேவை நிறுவனங்களுக்குப் புதிய கூடம் முழுமையான சேவை வழங்கும்.

சிங்கப்பூர் உலகத்தரமிக்க வர்த்தக, தளவாட நடுவமாகத் திகழ அது பெரிதும் கைகொடுக்கும்.

மறுபயனீட்டை ஊக்குவிக்கும் வர்த்தக நடைமுறையை CKL பின்பற்றும்.

உணவு பானத்துறையில் பயன்படுத்தப்பட்ட பொட்டலங்கள் அல்லது சமையல் எண்ணெயைச் சேகரித்துத் தனது தளவாடப் பிரிவின் மூலம் மறுபயனீட்டுக்கு அனுப்பவிருக்கிறது CKL.

கூடுதல் பயணத்தையும் கரியமில வாயு வெளியேற்றத்தையும் குறைக்க அது வழியமைக்கும் என்று வர்த்தக, தொழில் துணையமைச்சர் லோ யென் லிங் (Low Yen Ling) கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்