கழிவுகளைக் குறைக்க நிறுவனங்கள் மேலும் அதிக முயற்சிகளை எடுக்கவேண்டும்: அமைச்சர் ஏமி கோர்
வாசிப்புநேரம் -

(படம்: Screenshot/CNA)
நிறுவனங்கள் கழிவுகளைக் குறைக்கக் கூடுதல் முயற்சிகளை எடுக்கவேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத்துக்கான மூத்த துணையமைச்சர் ஏமி கோர் (Amy Khor) கூறியிருக்கிறார்.
முன்னேறும் சிங்கப்பூர் கலந்துரையாடல் ஒன்றில் பேசிய அவர் நாட்டின் Extended Producer Responsibility அணுகுமுறையைச் சுட்டினார்.
அதன்படி சந்தைக்குக் கொண்டு வரும் பொருள்கள் காலாவதியாகும்போது அதைத் திரும்பப் பெற்று முறையாக அப்புறப்படுத்தும் பொறுப்பு உற்பத்தியாளர்களுக்கு உண்டு.
அந்த முறை தற்போது மின்-கழிவு நிர்வாகத்திற்குப் பொருந்தும்.
அடுத்த சில ஆண்டுகளில் உணவு, பொட்டலமிடும் கழிவுக்கும் அது விரிவாக்கம் காணும்.
கலந்துரையாடலின்போது குறைவான மூலப்பொருள்களை வைத்து உற்பத்தி செய்வதைப் பற்றி பேசப்பட்டது.
பொட்டலமிடும்போது மறுபயனீட்டுக்கு உகந்த பல முறை பயன்படுத்தப்படக்கூடிய பொருள்களைச் சேர்ப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.