Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஊழியர்களுக்குச் சொந்தமாகப் பயிற்சிகளை நடத்த நிறுவனங்கள் சான்றிதழ் பெறலாம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரிலுள்ள நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களுக்குச் சொந்தமாகவே பயிற்சிகளை நடத்துவதற்குச் சான்றிதழைப் பெறலாம்.

ஸ்கில்ஸ் ஃபியூச்சர் சிங்கப்பூர் ( Skills Future Singapore) அமைப்பு ஆதரவளிக்கும் வேலையிடத் திறன் அங்கீகாரத் திட்டத்தின்கீழ் அது சாத்தியமாகும்.

ஊழியர்கள் வெளியிடங்களுக்குச் சென்று பயிற்சி பெறவேண்டிய அவசியமில்லை.

நிறுவனங்களின் செலவுகளையும் மனிதவளத்தையும் மிச்சப்படுத்தத் திட்டம் உதவும்.

அந்தத் திட்டத்தை முடித்துள்ள முதல் நிறுவனம் கடலுணவில் பிரபலமான JUMBO Group நிறுவனம்.

நவம்பர் மாதத்தில் நிறுவனம், சொந்த வேலையிடப் பயிற்சிகளைத் தொடங்கியது.

அதனால் பயற்சிகளுக்கு ஆகும் செலவுகள் 3 மடங்கு குறைந்ததாக நிறுவனம் சொன்னது.

இதுவரை சுமார் 30,000 வெள்ளியை மிச்சப்படுத்தியதாகவும் அது தெரிவித்தது.

நடவடிக்கைகளின் தேவைக்கேற்ப பயிற்சிகளை மேம்பட்ட முறையில் வடிவமைக்க முடிந்ததாகவும் நிறுவனம் கூறியது.

திட்டத்தில் இணைந்துகொள்ள நிறுவனங்கள் முதலில் தேசிய வேலையிடக் கற்றல் நிலையத்தில் 'Workplace Learning: READY' குறியீடு இட்ட சான்றிதழைப் பெற வேண்டும்.

அதற்குப் பிறகே நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட வேலையிடப் பயிற்சிகளை நடத்தலாம்.

உணவுச் சேவைகள், சில்லறை வர்த்தகத் துறைகளில் திட்டம் முதலில் சோதித்துப் பார்க்கப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் திட்டம் வழங்கப்படுகிறது.
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்