கடமையைச் செய்யத் தவறும் நிறுவன இயக்குநர்களுக்கு இனி $20,000 வெள்ளி அபராதம்
வாசிப்புநேரம் -
கடமையைச் செய்யத் தவறும் நிறுவன இயக்குநர்களுக்கு இனி அதிகபட்சம் 20,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.
இதற்கு முன்பு அதிகபட்ச அபராதத் தொகை 5,000 வெள்ளியாக இருந்தது.
புதிய திருத்தங்களைக் கொண்ட நிறுவனக் கணக்கியல் சட்ட மசோதா இன்று நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சிங்கப்பூரின் வர்த்தகச் சூழலை வலுவாக்கி, நிறுவன விதிகளைக் கடுமையாக்கக் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் (ACRA) மறுஆய்வு செய்தது.
அதில் ஒருபகுதியாக அந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.
வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த இனிமேல் பொதுத்துறைக் கணக்காளர்களின் பெயர்களும் தணிக்கை அறிக்கைகளில் இடம்பெறவேண்டும்.
மாற்றங்களால் சிறிய நிறுவனங்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அக்கறை தெரிவித்தனர்.
நிறுவன வெளிப்படைத்தன்மைக்கும் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புக்கும் இடையே சமநிலையின் அவசியத்தை ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளதாக இரண்டாம் நிதியமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார்.

ஆதாரம் : Others