Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மரீன் பரேடில் தண்ணீர்க் குழாயைச் சேதப்படுத்திய நிறுவனத்திற்கு $49,000 அபராதம்

வாசிப்புநேரம் -
மரீன் பரேடில் தண்ணீர்க் குழாயைச் சேதப்படுத்திய நிறுவனத்திற்கு $49,000 அபராதம்

(காணொளியிலிருந்து எடுக்கப்பட்டப் படம்/ படம்:CNA/Alvin Chong)

மரீன் பரேடில் தண்ணீர்க் குழாயைச் சேதப்படுத்திக் குடியிருப்புப் பகுதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய கட்டுமான நிறுவனத்திற்கு 49,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தேசியத் தண்ணீர் அமைப்பான PUB தெரிவித்துள்ளது.

Pal-Link Construction நிறுவனம் சென்ற ஆண்டு (2024) அக்டோபர் 4ஆம் தேதி முன் அனுமதி இல்லாமல் தண்ணீர்க் குழாய்த் தடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டது.

அப்போது தண்ணீர்க் குழாயில் ஏற்பட்ட பாதிப்பால்
அருகிலுள்ள மரீன் டிரைவ் (Marine Drive) குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் உண்டானது.

அதனால் சுமார் 1.1 மில்லியன் கேலன் தண்ணீர் வீணானது என்று PUB குறிப்பிட்டது.

ஸ்டில் ரோட் சவுத் (Still Road South) சாலையில் உள்ள மேம்பாலத்தில் மின்தூக்கியின் கட்டுமானத்திற்கு Pal-Link பொறுப்பேற்றிருந்தது.

பிரதான நீர்க்குழாய் அருகே தற்காலிக நிலத்தடி மண் தடுப்புக் கட்டமைப்புகளை நிறுவ அது அனுமதி பெறவில்லை.

பணிகளின்போது நிலந்தோண்டும் இயந்திரம் தரைக்கு அடியில் 1.8 மீட்டர் ஆழத்தில் உள்ள நீர்க்குழாயைச் சேதப்படுத்தியது.

சம்பவத்தினால் சுமார் 30 நிமிடங்களுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவசரப் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக இடப்பக்க வழித்தடம் ஒருநாளுக்கு மேல் மூடப்பட்டிருந்தது.
 
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்