Skip to main content
கட்டுமானத் துறையில் ஆள்பலத்தை 40% குறைக்க உதவும் தொழில்நுட்பம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கட்டுமானத் துறையில் ஆள்பலத்தை 40% குறைக்க உதவும் தொழில்நுட்பம்

வாசிப்புநேரம் -
வெளியீடு : 07 Feb 2026 06:20PM புதுப்பிப்பு : 07 Feb 2026 06:21PM

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நாட்டில் முதன்முறையாக ஒரு கான்கிரீட் கட்டமைப்பை வெற்றிகரமாக முப்பரிமாண முறையில் அச்சிட்டுள்ளனர் . 

அது மனிதவளத்தை 40 விழுக்காட்டுக்கும் மேல் குறைத்து செயல்திறனை 60 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரிக்கிறது.

பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்யும் அதே வேளையில் ஊழியர் பற்றாக்குறையையும் இது நிவர்த்தி செய்கிறது.

கட்டுமான நடைமுறைகளை மறுவடிவமைக்கத் தொழில்நுட்பம் உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். 


முப்பரிமாண முறையில் அச்சிட்டுத் தனது சொந்த எடையைத் தாங்கக்கூடிய ஒரு கான்கிரீட் கட்டமைப்பை ஆய்வாளர்கள் உருவாக்குவது அது முதல் முறை.

கட்டமைப்பின் பலத்தை உறுதிசெய்யக் குழு அதைத் தொடர்ச்சியான சோதனைகளுக்கு உட்படுத்துகிறது.

தற்போதுள்ள முறைகளுடன் கான்கிரீட் முப்பரிமாண அச்சீட்டு முறையைப் பயன்படுத்தக் குழு முனைகிறது.

அதற்கான புதிய வழிகாட்டிகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று (6 பிப்ரவரி) வெளியிட்டது. 

உள்ளூர்ச் சூழ்நிலைகளில் இந்தக் கட்டமைப்புகள் நீடித்து நிலைத்திருப்பதைச் சோதிக்கக் கூடுதல் ஆய்வுகள் தேவை என்று கழகம் தெரிவித்தது.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்