தொடர்பில்லா மின்னிலக்கக் கட்டண முறையில் சுமார் 3,000 முனையங்களில் நன்கொடை வழங்க ஏற்பாடு
தொடர்பில்லா மின்னிலக்கக் கட்டண முறையைப் பயன்படுத்தி, சுமார் 3,000 முனையங்களில் நன்கொடை வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
(படம்: Pixabay)
தொடர்பில்லா மின்னிலக்கக் கட்டண முறையைப் பயன்படுத்தி, சுமார் 3,000 முனையங்களில் நன்கொடை வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அது சாத்தியமாகும்.
நோய்ப்பரவல் சூழலில் ரொக்கப் புழக்கத்தைக் குறைத்து, மின்னிலக்கப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க அந்தத் திட்டம் வகை செய்யும்.
புதிய திட்டத்தின் மூலம் Lion's Befrienders சமூகச் சேவை அமைப்பு பயன்பெறவுள்ளது.
30க்கும் மேற்பட்ட உணவு-பானக் கடைகளில் மின்னிலக்கக் கட்டண முனையங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் கட்டணத்தைச் செலுத்தும் அதேவேளை, நன்கொடையும் வழங்கலாம்.
Givepls மின்னிலக்கத் தளத்துடனும் GovTech அரசாங்க அமைப்புடனும் Lion's Befrienders இணைந்து பணியாற்றிவருகிறது.
இதுவரை 500 வெள்ளி மதிப்புள்ள நன்கொடை பெறப்பட்டுள்ளது.
மேலும் 9 தொண்டு நிறுவனங்கள் புதிய திட்டத்தில் சேரவுள்ளன.