Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

யீஷூனில் 500 பெட்டிகள் நிறைய தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள்... 3 மலேசியர்கள் கைது

வாசிப்புநேரம் -
யீஷூனில் 500 பெட்டிகள் நிறைய தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள்... 3 மலேசியர்கள் கைது

(Singapore Customs)

யீஷூன் வட்டாரத்தில் சிங்கப்பூர்ச் சுங்கத்துறை நடத்திய அமலாக்க நடவடிக்கையில் ஏராளமான தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இம்மாதம் 22ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் யீஷூன் இண்டஸ்டிரியல் ஸ்ட்ரீட் 1இல் உள்ள கிடங்கொன்றில் சோதனை நடத்தப்பட்டது. 

அதில் அதிகாரிகள் கண்டுபிடித்தது:
-- 512 பெட்டிகளில்
-- 759 தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுப் பொட்டலங்கள்

சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூவர் மலேசியர்கள்.  அவர்கள் 28 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். 

அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa