Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

குத்தகையைப் பெறக் கையூட்டு வழங்கிய இந்திய நாட்டவருக்கு $15,000 அபராதம்

வாசிப்புநேரம் -
குத்தகையைப் பெறக் கையூட்டு வழங்கிய இந்திய நாட்டவருக்கு $15,000 அபராதம்

படம்: Google Street View

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கூட்டுரிமை வீட்டு மேலாளருக்குக் கையூட்டு வழங்கியதற்காக பன்னீர்செல்வம் ஏழுமலை என்ற குத்தகையாளருக்கு 15,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குத்தகையைப் பெறுவதற்காக அவர் கூட்டுரிமை வீட்டின் நிர்வாகிக்குக் கையூட்டு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்வழி பன்னீர்செல்வம் சம்பந்தப்பட்ட கூட்டுரிமை வீட்டின் வாகனப் பாதையில் தரைக்கற்களைப் பொருத்தும் ஏலக்குத்தகையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால் பணி முடிந்த ஒருவாரம் கழித்து அந்தப் பாதையில் பூசப்பட்டிருந்த சாயம் வெளுக்கத் தொடங்கியது. கற்களிலும் வெடிப்பு ஏற்படத் தொடங்கியது.

இந்திய நாட்டவரான பன்னீர்செல்வம், Mountec எனும் பழுதுபார்ப்பு, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நடவடிக்கை இயக்குநரும் உரிமையாளரும் ஆவார்.

கையூட்டு வழங்கப்பட்ட போது போபி அகஸ்டின் என்ட்ரூஸ் (Bobby Augustine Andrews) என்பவர் கூட்டுரிமை வீட்டின் மேலாளராக இருந்தார்.

அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.
 
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்