Asia Sentinel, Nikkei Asia வெளியிட்ட கருத்துகளைத் திருத்தும்படி POFMA சட்டத்தின்கீழ் உத்தரவு

(படம்: Asia Sentinel)
கலிபோர்னியாவைச் சேர்ந்த Asia Sentinel இணையச் செய்தித்தளம் Nikkei Asia இணையச் செய்தித்தளத்தில் ஆன்டி வோங் மின் ஜுன் (Andy Wong Min Jun) எழுதிய கட்டுரையின் தொடர்பில் அது வெளியிட்ட கருத்துகளைத் திருத்தும்படி POFMA சட்டத்தின்கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"Singapore kills a Chicken to Scare the Monkeys" எனும் தலைப்பில் அந்தக் கட்டுரை மே 24ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
கட்டுரையை எழுதிய ஜான் பெர்தெல்சன் (John Berthelsen) வோங்கைப் பேட்டி கண்டார்.
வோங் நாடுகடத்தப்படவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டார்.
வழக்கறிஞர் M. ரவி, பிரதமர் லீ சியென் லூங்கின் சகோதரர் லீ சியென் யாங் போன்றவர்களின் நிலைமைக்கு இணையாக வோங்கின் நிலைமையை ஒப்பிட்டார்.
Asia Sentinel வெளியிட்ட கட்டுரையில் பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சு இன்று (26 மே) தெரிவித்தது.