நிர்வாக வாரியப் பன்முகத்தன்மை மன்றத்தில் புது உறுப்பினர்கள்
வாசிப்புநேரம் -

நிர்வாக வாரியப் பன்முகத்தன்மை மன்றம் இவ்வாண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்கிறது.
அவர்களின் பெயர்களைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அறிவித்தது.
இணைத் தலைவர்களாகத் திரு கான் சியோ கீ (Gan Seow Kee), திருவாட்டி கோ சுவீ சென் (Goh Swee Chen) ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 6 புதிய உறுப்பினர்களும் மன்றத்தில்
ஈராண்டுத் தவணைக்குச் சேர்கின்றனர்.
மன்றத்தில் புதிதாகச் சேர்ந்தவர்களில் ஒருவர், தேசிய சமூகச் சேவை மன்றத்தின் கௌரவப் பொதுச் செயலாளர் கிரேகரி விஜயேந்திரன் (Gregory Vijayendran).
நிர்வாகக் குழுக்களில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க அந்த மன்றத்தை அமைச்சு அமைத்தது.
சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள், அரசாங்க ஆணைபெற்ற அமைப்புகள், அறநிறுவனங்கள் போன்றவற்றின் நிர்வாகக் குழுக்களில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட பல அம்சங்களில் மன்றம் கவனம் செலுத்துகிறது.

ஆதாரம் : Others