"அமெரிக்க அரசியலில் மாற்றத்தால் சஞ்சலமடைய வேண்டாம்"
அமெரிக்க அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டு உலக நாடுகள் சஞ்சலமடையத் தேவையில்லை என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) கூறியுள்ளார்.
மாறாக, அவை நீண்ட காலத் தீர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
ஆறு நாள் சீனப் பயணத்தின் இறுதியில் திரு லீ செய்தியாளர்களிடம் பேசினார்.
அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. டோனல்ட் டிரம்ப், சீன இறக்குமதிக்குப் புதிய வரி விதிக்கப் போவதாகத் தெரிவித்துள்ள வேளையில், திரு. லீயின் கருத்துகள் வந்துள்ளன. திரு. லீ பிரதமராக இருந்தபோது 14 முறை அங்குச் சென்றுள்ளார்.
ஆனால் மூத்த அமைச்சராக இதுவே அவரின் முதல் பயணம்.
அவ்வப்போது இத்தகைய பயணம் மிகவும் முக்கியம் என்றார் திரு லீ.
சிங்கப்பூர் - சீன உறவு முக்கியம் என்றும் அந்நாட்டின் அடுத்த தலைமுறைத் தலைவர்களுடன் சிங்கப்பூர் உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் திரு. லீ வலியுறுத்தினார்.