Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"Wanderlust"... பயணம் செய்யக் கொள்ளை ஆசை... 2022இல் முதலில் எங்குச் சென்றீர்கள்?

வாசிப்புநேரம் -

Wanderlust எனும் நவீன ஆங்கில வார்த்தை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள விரும்புபவர்களிடம் இருக்கும் உணர்ச்சியைக் குறிக்கிறது. 

அத்தகைய உணர்ச்சி கொண்ட பலர் நம்மிடையில் உள்ளனர்...

இவ்வாண்டு, சிங்கப்பூரில் வெளிநாட்டுப் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன... மக்கள் முதலில் சென்ற வெளிநாடு? 

உல்லாசப் பயணங்களை 'செய்தி'உடன் பகிர்ந்துகொண்டனர் சிலர்...

  • "பலரும் அங்குச் செல்கின்றனர்"

பயணக்கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட பிறகு குமாரி சிந்துஜா சென்ற முதல் இடம் இந்தோனேசியாவின் பாலித் தீவு...

அவர் கடைசி நிமிடத்தில் விமானப் பயணத்துக்கும் ஹோட்டல்களுக்கும் பதிவு செய்தார்.

இடத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம்? 
✈️ கடைசி நிமிடத்திலும் மலிவான விமானச் சீட்டு, ஹோட்டல் ஏற்பாடுகள் கிடைத்தன
✈️ பல சிங்கப்பூரர்கள் அங்குச் சென்றுகொண்டிருந்தனர்
✈️ அதற்கு முன்னர் அங்குச் சென்றதே இல்லை

  • திருமணமான பிறகு சென்ற முதல் பயணம்

திருமணமான பிறகு, சுமார் ஓராண்டு கழித்து இவ்வாண்டு மே மாதத்தில் தம் கணவருடன் முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டதாகத் திருமதி ஷாலினி பகிர்ந்துகொண்டார். 

"பல திட்டங்கள் இருந்தன - இங்குச் செல்வது அங்குச் செல்வது என்று... நோய்ப்பரவலால் நம்மால் எங்கும் செல்லமுடியவில்லை... அதனால் காத்திருந்தோம்"

என்றார் அவர். 

இடத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம்? 
✈️ தாய்லந்தின் எல்லைகள் திறக்கப்பட்டன
✈️ மலிவான பயணம்
✈️ சற்றுப் பாதுகாப்பான நாடு
✈️ அழகான தீவு, சுற்றுப்புறம்

  • "குறைந்த விலை, நிறைந்த மனம்... "

பயணக்கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட பிறகு திருமதி ரஞ்சிதா சுப்பிரமணியம் சென்ற முதல் இடம் மலேசியாவின் கேமரன் மலைப்பகுதி...

வாரயிறுதியில் அங்குத் தனியாகச் சென்ற அவர்
2 நாள்களையும் தேயிலைத் தோட்டங்கள், அருவி எனச் சில அமைதிதரும் பகுதிகளில் செலவிட்டார்.  

இடத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம்? 
✈️ மலிவுப் பயணம் (50 வெள்ளிப் பேருந்துப் பயணம்)
✈️ சாலைப் பயணம் - 3 மணிநேரம் தான்
✈️ குளிர்ச்சி, மலைப்பகுதி

  • "மீண்டும் காண ஏக்கம்"

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு குமாரி ஷாஷ்ரீனா சென்ற முதல் இடம் தாய்லந்தின் புக்கெட்...

அவர் அங்கு ஏற்கனவே சிலமுறை சென்றிருக்கிறார்... என்றாலும் குடும்பத்துடன் மீண்டும் இவ்வாண்டு மே மாதம் சென்றதாகச் சொன்னார். 

பலரும் முகக்கவசம் அணியாததால் அவருக்கும் நோய்த்தொற்று ஏற்படலாம் என்ற பயம் இருந்தது. குமாரி ஷாஷ்ரீனாவும் அவரது குடும்பமும் தாய்லந்தில் தொடர்ந்து முகக்கவசம் அணிந்தனர். 

இடத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம்? 
✈️ கண்கவர் காட்சிகளை மீண்டும் காண ஏக்கம்
✈️ ருசியான உணவை உண்ண விருப்பம்

ஒருசிலர் குறைந்த விலையில் கண்கவர் வெளிநாட்டு இடங்களுக்குச் செல்ல முனைந்தனர்; மற்றவர்கள் பாதுகாப்பான இடங்களை நாடினர்...

சிங்கப்பூரில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து, நம்மில் பலரும் முதலில் சென்றது அருகில் இருக்கும் நாடுகளுக்குத் தான்...

"எங்குச் சென்றாலும் சரி தான், வெளிநாடு சென்றாலே போதும்" என்ற மனப்பான்மை பலரிடையே தோன்றியதைக் கவனிக்கலாம். 
 

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்