Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

100க்கும் மேற்பட்ட வெறும் பொட்டலங்களைப் பெற்ற தம்பதி

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் ஒரு தம்பதிக்கு நூற்றிற்கும் மேற்பட்ட வெறும் பொட்டலங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சுமார் இரண்டரை மாத காலத்திற்கு தினமும் 7 முதல் 8 வெறும் பொட்டலங்களைப் பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர். சில பொட்டலங்களில் குறிப்பிடப்பட்ட பொருள்களுக்குப் பதிலாக டிஸ்யூ தாள்கள் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

முதலில் அவை தவறான முகவரிக்கு அனுப்பப்பட்டதாக அவர்கள் எண்ணினர். 

வீட்டின் முன்னாள் உரிமையாளரிடமும் அதைப் பற்றி விசாரித்தனர். 

பிரச்சினையைப் பற்றி தம்பதி Shopee நிறுவனத்திடம் புகார் அளித்தது. நிறுவனத்தின் அறிவுரையின்படி தங்கள் கணக்கின் கடவுச்சொற்களை அவர்கள் மாற்றினர். ஆனால் பொட்டலங்கள் தொடர்ந்து வந்தன.

காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.  பணம் எதுவும் பறிபோகாத காரணத்தால் Shopee நிறுவனத்தை மீண்டும் அணுகும்படி காவல்துறை அவர்களிடம் கூறியது.

Shopee நிறுவனம், சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களது கணக்கைத் தடை செய்துள்ளதாக CNAவிடம் தெரிவித்தது. அப்போது முதல் தம்பதிக்குப் பொட்டலங்கள் வருவது நின்றது.

இதற்குக் காரணம்?

விற்பனையாளர்கள் தங்கள் பொருள்களின் விற்பனை அளவை உயர்த்திக் காட்ட இப்படிச் சிலரின் பெயரையும் முகவரியையும் அனுமதியின்றிப் பயன்படுத்த முயன்றதாக  நம்பப்படுகிறது. 

மேலும் வாடிக்கையாளர்களின் பெயரில் போலியான பரிந்துரைகளையும் விற்பனையாளர்கள் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

அத்தகைய மோசடிகள் குறித்து இதுவரை புகார்கள் வந்ததில்லை என்று சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை வாடிக்கையாளர் ஆணையம் தெரிவித்தது (Competition and Consumer Commission of Singapore).

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்