மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நாய்களைக் கடத்திய தம்பதிக்குச் சிறை
வாசிப்புநேரம் -

(படம்: CNA/Ili Mansor)
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நாய்களைக் கடத்திய தம்பதிக்கு 3 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சூன் பூன் கொங்கும் (Soon Boon Khong) ரெய்னா வோங் ஸி சியும் (Reina Wong Si Qi) உரிமமின்றி நாய்களை இறக்குமதி செய்த இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.
மேலும் இரு நாய்களைக் கடத்திய இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
அவர்கள் dachshund, pomeranian, poodle ஆகிய வகை நாய்களைச் சிங்கப்பூருக்குள் கடத்த முயன்றனர்.
இருவரும் காரில் நாய்களை மறைத்து வைத்து சிங்கப்பூருக்குள் நுழைந்தனர்.
அந்த நாய்களை விற்க இணையத்தில் விளம்பரம் செய்தனர்.
திருவாட்டி டோக் சூ வென் (Tok Su Wen) dachshund வகை நாயை வாங்க அவர்களைத் தொடர்புகொண்டார்.
அவருக்கு முன்னதாக 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
விலங்குக் கடத்தலை ஊக்குவித்த குற்றத்திற்கு அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
உரிமமின்றி விலங்குகளை இறக்குமதி செய்த குற்றத்திற்கு 12 மாதம் வரை சிறை அல்லது 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆதாரம் : CNA