Skip to main content
ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவில்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவில்லை - உணவு விநியோக நிறுவனங்களை நடத்திய தம்பதிக்கு அபராதம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உணவு விநியோக நிறுவனங்களை நடத்திய தம்பதி அவர்களுடைய 100 ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்காததால் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

31 வயது சிம் லிங் சென் (Sim Ling Zhen), அவருடைய 37 வயது கணவர் வூ வென்சுன் (Wu Wenchun) இருவருக்கும் தலா
72,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அவர்கள் இருவரும் 66 வாரங்கள் சிறையில் அடைக்கப்படுவர்.

Royal Cuisine Group, Yanxi, Healthy Meals Catering ஆகிய மூன்று நிறுவனங்கள் அவர்கள் நடத்தினர்.

ஊழியர்களுக்கு மொத்தம் சுமார் 432,000 வெள்ளி ஊதியமாக வழங்கப்பட்டிருக்கவேண்டும். அதில் வெறும் 73,000 வெள்ளி மட்டுமே செலுத்தப்பட்டது.

2022ஆம் ஆண்டில் உணவை விநியோகம் செய்யத் தவறியதால் அவர்களின் நிறுவனங்களுக்கு எதிராகப் புகார்கள் கொடுக்கப்பட்டன.

அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வாடகையைச் செலுத்தத் தவறியதால் நிறுவனங்கள் மூடப்பட்டன.

ஊழியர்கள் அவர்களுக்குரிய ஊதியத்தைப் பெற முயற்சி செய்தபோது இருவரும் ஒத்துழைக்க மறுத்தனர்.

ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கத் தவறினால் 3,000 வெள்ளியிலிருந்து 15,000 வெள்ளிவரை அபராதம், அதிகபட்சம் 6 மாதச் சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்