Skip to main content
DHL, NinjaVan, J&T Express நிறுவனங்களின் பெயரில் மோசடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

DHL, NinjaVan, J&T Express நிறுவனங்களின் பெயரில் மோசடி

வாசிப்புநேரம் -
DHL, NinjaVan, J&T Express நிறுவனங்களின் பெயரில் மோசடி

படம்: SPF

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Courier எனும் தனியார் விநியோகச் சேவை நிறுவனங்களின் பெயரில் நடத்தப்படும் மோசடி குறித்துக் காவல்துறை எச்சரித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் அத்தகைய மோசடிகள் குறித்து சுமார் 250 புகார்கள் கிடைத்திருக்கின்றன.

பாதிக்கப்பட்டோர் இழந்த தொகை 1.2 மில்லியன் வெள்ளிக்கும் அதிகம்.

DHL, NinjaVan, J&T Express, Singapore Post போன்ற நிறுவனங்களின் பெயர்களில் மோசடி நடந்திருக்கிறது.

Apple iMessage மூலம் மோசடிக்காரர்கள் தொடர்பு கொள்கின்றனர்.

வாடிக்கையாளரின் முகவரி விவரம் இல்லாததால் தபாலை அனுப்ப முடியவில்லை என்று அவர்கள் கூறுவர்.

அவர்கள் அனுப்பிவைக்கும் இணைய முகவரிக்குச் செல்லும் சிலர் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்துவிடுகின்றனர்.

அறிமுகம் இல்லாதவர்கள் அனுப்பும் இணைய முகவரிகளைக் கவனமாய் அணுகும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்