Skip to main content
பாலியல் துன்புறுத்தல் வழக்கு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பாலியல் துன்புறுத்தல் வழக்கு - குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் விடுவிப்பு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு வயது 66, அவரது தோழருக்கு வயது 74.

2021இல் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

பெண் மீது 13 குற்றச்சாட்டுகளும் ஆடவர் மீது 15 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

பெண் தம் மகளுக்கு இளம் வயதிலேயே ஆபாசப் படம் காட்டியதாகச் சொல்லப்பட்டது.

தோழர் மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்கு உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகிக்கப்பட்டது.

ஆடவர் உடற்பிடிப்பு, மருத்துவச் சேவை என்ற பெயரில் சிறுமியைத் துன்புறுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

2012க்கும் 2017க்கும் இடைப்பட்ட காலத்தில் சிறுமி பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அவர் 2017இல் புகார் கொடுத்தார். அவருக்குத் தற்போது 24 வயது.

ஆதாரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன, அவற்றில் நம்பகத்தன்மை இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்