Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒப்புதல் வழங்கப்பட்டால் COVID-19 சூழலை மாத்திரை மாற்றியமைக்கக்கூடும்: மருத்துவர்கள்

MSD மருந்து நிறுவனம் (Merck &Co) COVID-19 மாத்திரைகளை விநியோகிக்க, சிங்கப்பூருடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -

MSD மருந்து நிறுவனம் (Merck &Co) COVID-19 மாத்திரைகளை விநியோகிக்க, சிங்கப்பூருடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

அதே வேளையில் சிங்கப்பூர் COVID-19ஐ நிரந்தர நோயாகக் கருதும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இத்தகைய சூழலில், Molnupiravir என்ற அந்த மாத்திரை, தற்போதைய நிலவரத்தைச் சமாளிக்கப் பெருமளவில் உதவும் என்பது சில மருத்துவர்களின் கருத்து.

சோதனை நிலையில் உள்ள Molnupiravir மாத்திரையின் சோதனை முடிவுகளின்படி, அது கிருமிக்கு எதிராக அதிகச் செயல்திறன் கொண்டுள்ளது

என்கிறார் டாக்டர் கஸாலி.

தற்போதைய சூழலில் பாக்டீரியா வகைக் கிருமிக்கு எதிராக அதிகமான மருந்துகள் உள்ளன... ஆனால் வைரஸ் நோய்க்கிருமிகளுக்கு எதிரான மருந்துகள் குறைவு என்பதை டாக்டர் கஸாலி சுட்டினார்.

COVID-19 நோய் வைரஸ் கிருமியால் உண்டாகிறது.

அதனை எதிர்க்கக்கூடிய மாத்திரை உருவாக்கப்பட்டது மிக நல்லது என்று கூறிய அவர், அது போன்ற மாத்திரைகள், மற்ற சில COVID-19 சிகிச்சை முறைகளைவிட மலிவாக இருக்கக்கூடும் என்றார்.

COVID-19 மாத்திரை மருத்துவச் சூழலையே மாற்றியமைக்கக்கூடும்

என்று டாக்டர் லியாங் ஹோ நாம் (Leong Hoe Nam) CNAஇடம் கூறினார்.

நோய்த்தொற்று ஏற்பட்டோரிடையே நோய் கடுமையான நிலைக்கு மாறுவதை மாத்திரை தடுக்கலாம் என்றார் அவர்.

அதோடல்லாமல், நோய் உறுதிப்படுத்தப்படும்போது அது கடுமையாவதைத் தடுப்பதற்கு மருத்துவர்கள் உடனடித் தீர்வாக மாத்திரைகளை வழங்கலாம்.

அதனால், மருத்துவமனைகள், தனியார் மருந்தகங்கள், பலதுறை மருந்தகங்கள் ஆகியவற்றில் மருத்துவர்கள் COVID-19ஐ நிரந்த நோயாகச் சமாளித்துக்கொள்ளலாம் என்று டாக்டர் லியாங் கூறினார்.

எதுவாயினும், தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி பெற்றவர்கள் தொடர்ந்து தேவையான அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியம் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்