Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 3 மாதங்களில் ஆக அதிகமான அன்றாட நோய்த்தொற்று எண்ணிக்கை - 11,504 சம்பவங்கள்

வாசிப்புநேரம் -


சிங்கப்பூரில் இன்று 11,504 புதிய COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அது கடந்த சுமார் 3 மாதங்களில் இல்லாத ஆக அதிக அன்றாட எண்ணிக்கை.

சம்பவங்களில்.....

உள்ளூரில் பதிவானவை - 10,732
வெளிநாடுகளிலிருந்து வந்தோர் - 772

கிருமித்தொற்றால் ஒரு மரணமும் நேர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்டோர் மொத்த எண்ணிக்கை - 1,410

437 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

36 பேருக்கு உயிர்வாயு தேவைப்படுகிறது.

9 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அண்மை அறிக்கை குறிப்பிட்டது.

வாரயிறுதியைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை கணக்கிடப்படும் எண்ணிக்கை பொதுவாக அதிகமாக இருக்கும்.

இத்தகைய போக்கு குறித்து சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியிருந்தார்.

இன்று பாதிக்கப்பட்டோரில் சுமார் 9,989 பேருக்கு மிதமான அறிகுறிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa