Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

$14,000 மதிப்புள்ள ART பரிசோதனைக் கருவிகளைக் கையாடிய மேலாளருக்குச் சிறைத்தண்டனை

வாசிப்புநேரம் -
COVID விரைவுப் பரிசோதனை நிலையத்தின் மேலாளர் தமது சக ஊழியருடன் சேர்ந்து ART பரிசோதனைக் கருவிகளைக் கொண்ட 103 பெட்டிகளைக் கையாடினார்.

அவற்றின் மதிப்பு 14,162.50 வெள்ளி.

28 வயது டெங் சியாங்யிங் (Deng Xiangying) தேக்கா விரைவுப் பரிசோதனை நிலையத்தில் மேலாளராகப் பணிபுரிந்தார்.

அவரோடு சேர்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட ஆட்ரி சாவ் சீ எங் (Audrey Sau Qi Ng) அதே நிலையத்தில் உதவியாளராகப் பணி புரிந்தார்.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நிலையத்தின் ஊழியர் செய்த தவறான கணிப்பினால் சுகாதார மேம்பாட்டு வாரியத்திலிருந்து கூடுதலாக ART பரிசோதனைக் கருவிகளைப் பெற்றதை டெங் உணர்ந்தார்.

செய்த தவற்றை மறைப்பதற்காக டெங்கும் ஆட்ரியும் கூடுதலாகப் பெற்ற பெட்டிகளைத் தங்களின் வீட்டுக்குக் கொண்டுசெல்ல முடிவெடுத்தனர்.

சென்ற ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி அன்று இருவரும் பெட்டிகளை நிலையத்தின் வெளியே கொண்டுசெல்வது CCTVஇல் பதிவானது.

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 29 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 1 ஆம் தேதி வரை 25 ART பரிசோதனைக் கருவிகளை 100 வெள்ளியிலிருந்து 140 வெள்ளி வரை Carousell தளத்தில் அவர்கள் விற்றனர்.

ART பரிசோதனைக் கருவிகளைக் கொண்ட 44 பெட்டிகளை மொத்தம் 5,363.70 வெள்ளிக்கு விற்றனர்.

மீதமிருந்த 59 பெட்டிகள் விசாரணையின்போது கண்டெடுக்கப்பட்டன.

டெங்குக்கு 3 வாரங்கள் சிறைத்தண்டனையும் இழப்பீடாக 2505.25 வெள்ளி கட்டணம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

ஆட்ரி மீதுள்ள வழக்கு தொடர்கிறது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்