சிங்கப்பூரில் மேலும் 6,100க்கும் மேற்பட்டவர்களுக்கு COVID-19 தொற்று

(படம்: AFP/Roslan Rahman)
சிங்கப்பூரில் நேற்றுப் புதிதாக 6,100க்கும் அதிகமானோருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாகப் புதிதாகப் பாதிக்கப்படுவோரின் மொத்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த நான்கு நாள்களாக நோய்ப்பரவல் விகிதம் 1.51க்குக் குறைந்துள்ளது. இருப்பினும், இரண்டு வாரங்களுக்குள் அந்த விகிதம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
தற்போது 582 பேர் மருத்துவமனைகளில் நோய்த்தொற்றுக்காகச் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 9 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
74 பேருக்கு உயிர்வாயு ஆதரவு வழங்கப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 262 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது.