Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட COVID-19 பரிசோதனைக் கருவிக்கு அமெரிக்க உணவு, மருந்து ஆணையத்தின் அங்கீகாரம்

சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட COVID-19 பரிசோதனைக் கருவி, அமெரிக்க உணவு, மருந்து ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட COVID-19 பரிசோதனைக் கருவிக்கு அமெரிக்க உணவு, மருந்து ஆணையத்தின் அங்கீகாரம்

(படம்: GenScript Biotech)

சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட COVID-19 பரிசோதனைக் கருவி, அமெரிக்க உணவு, மருந்து ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

அந்த அங்கீகாரத்தைப் பெற்ற முதல் பரிசோதனைக் கருவி அது.

ஒருவர் கிருமித்தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அந்தக் கருவி கண்டறியும்.

'cPass' என்றழைக்கப்படும் அந்தச் சோதனைக் கருவியை அவசர நேரங்களில் பயன்படுத்த ஆணையம் அங்கீகாரம் வழங்கியது.

கொரோனா கிருமியை முறியடிக்கும் நோய் எதிர்ப்புச் சக்திப் புரதங்களை அந்தக் கருவி கண்டறியும்.

அதன் வழி நோயாளிகளிடையே ஏற்படும் தாக்கத்தைத் தெரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

சிங்கப்பூரின் Duke-NUS மருத்துவப் பள்ளி அந்தச் சோதனைக் கருவியை உருவாக்கியது.

அது சுகாதார அறிவியல் ஆணையத்தின் இடைக்கால அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

உத்தேசத் தடுப்பு மருந்துகளின் நம்பகத்தன்மையை மதிப்பிடவும் சோதனைக் கருவி உதவ முடியும்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோரை அடையாளம் காணும் முறையை மேம்படுத்தவும் கருவி துணைபுரியும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa