Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2025இல் CPF திட்டங்களில் மாற்றங்கள்... தெரிந்துகொள்ளவேண்டியவை

வாசிப்புநேரம் -
2025இல் CPF திட்டங்களில் மாற்றங்கள்... தெரிந்துகொள்ளவேண்டியவை

(படம்: CNA)

அடுத்த ஆண்டு (2025) ஜனவரி முதல் மத்தியச் சேமநிதிக் கணக்கு (CPF) நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்படும்.

அவற்றைப் பட்டியலிட்டது 'செய்தி'.

1. 55 வயதை அடைந்த மத்திய சேம நிதி உறுப்பினர்களின் சிறப்புக் கணக்கு மூடப்படும்

சிறப்புக் கணக்கில் உள்ள பணம் ஓய்வுக்காலக் கணக்கிற்கு (Retirement Account) மாற்றப்படும்.

முழு ஓய்வுக்காலக் கணக்கு நிரப்பப்பட்ட பிறகு எஞ்சிய தொகை சாதாரணக் கணக்கிற்கு (Ordinary Account) மாற்றப்படும்.

ஓய்வுக்காலக் கணக்கில் அதிகப் பணம் இருந்தால், மாதந்தோறும் கூடுதல் வழங்குதொகையைப் பெறலாம்.

2. மேம்படுத்தப்பட்ட ஓய்வுக்காலத் தொகையின் உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் (Enhanced Retirement Sum)

மேம்படுத்தப்பட்ட ஓய்வுக்காலக் கணக்கில் 426,000 வெள்ளி வரை சேமிக்கலாம்.

2025இல் 55 வயதை அடையும் ஒருவர் மேம்படுத்தப்பட்ட ஓய்வுக்காலக் கணக்கில் 426,000 வெள்ளி வைத்திருந்தால் அவர் மாதந்தோறும் சுமார் 3,300 வெள்ளி வரை பெறலாம்.

3. Matched Retirement Savings திட்டம்

தகுதிபெறும் மத்திய சேமநிதி உறுப்பினர்களின் கணக்குகளில் நிரப்பப்படும் தொகைக்கு ஈடாக அரசாங்கம், ஆண்டுக்கு 2,000 வெள்ளி வரை தொகை நிரப்பும். அதற்கு இனி வயது வரம்பு இல்லை.

இதனால் ஆண்டுதோறும் சுமார் 800,000 பேர் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடிப்படை ஓய்வுகாலச் சேமிப்புக்கான வரம்பை எட்டாத மூத்தோருக்கு உதவி செய்வதும் அவர்கள் ஓய்வுகாலத்தில் கூடுதலாகச் சேமிக்கத் துணைபுரிவதும் இதன் நோக்கம்.

4. மூத்தோருக்கான ஆதரவுத் திட்டம் - Silver Support Scheme

மூத்தோர் ஆதரவுத் திட்டத்தில் வழங்கப்படும் காலாண்டுத் தொகை 20 விழுக்காடு அதிகரிக்கும்.

தகுதிபெறுவோரின் தனிநபர் மாதாந்திரக் குடும்ப வருமானம் 2,300 வெள்ளியாக இருக்கவேண்டும்.

5. வேலைநலன் துணை வருமானத் திட்டம் - Workfare Income Supplement Scheme

தகுதிபெறுவோரின் வருமானம் அதிகபட்சம் 3,000 வெள்ளியாக இருக்கவேண்டும்.

2025ஆம் ஆண்டு முதல், தகுதிபெறும் ஊழியர்கள் 4,900 வெள்ளி வரை வேலைநலன் உதவித் தொகையைப் பெறலாம்.

6. இணையத்தளச் சேவை ஊழியர்கள் இணையவழி நிறுவனங்களின் மூலம் மத்தியச் சேமநிதிக் கணக்கில் சந்தாச் செலுத்தலாம்

இணையவழி நிறுவனம் செலுத்தும் சந்தாவும் சேர்ந்தால் ஊழியரின் மத்திய சேமநிதிச் சேமிப்பு பெருகும்.

7. CPF மாதாந்திர சம்பள உச்சவரம்பு உயர்த்தப்படும்

அடுத்த மாதம் CPF மாதாந்திரச் சம்பள உச்சவரம்பு 7,400 வெள்ளிக்கு உயர்த்தப்படும். 2026ஆம் ஆண்டுக்குள் அது 8,000 வெள்ளிக்கு உயர்த்தப்படும்.

8. முதியோருக்கான மத்திய சேமநிதிச் சந்தா விகிதம் (percentage point) அதிகரிக்கும்

55 வயது முதல் 65 வயதுடைய உறுப்பினர்கள் செலுத்தும் மத்திய சேமநிதிச் சந்தா விகிதம் 1 விழுக்காடு உயரும்.

அவர்களுக்காக முதலாளிகள் செலுத்தவேண்டிய மத்திய சேமநிதிச் சந்தா விகிதம் 0.5 விழுக்காடு உயரும்.

ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்