Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மத்திய சேம நிதிச் சிறப்புக் கணக்கு மூடப்பட்ட பிறகு நீங்கள் என்ன செய்யலாம்?

வாசிப்புநேரம் -
55 வயதை அடைந்த மத்திய சேம நிதி உறுப்பினர்களின் சிறப்புக் கணக்கு மூடப்படவுள்ளது. அந்த மாற்றம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்தில் நடப்புக்கு வரும்.

மாற்றத்தால் மூத்தோர் சிலர் பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அந்த மாற்றத்திற்கு ஏற்றவாறு செயல்பட வழிகள் உண்டு என்றும் அவர்கள் சொல்கின்றனர்.

- 65 வயதிற்குப் பிறகு ஓய்வுக்காலக் கணக்கிலிருந்து கூடுதல் தொகையை மீட்டுக்கொள்ளலாம்:

மேம்பட்ட ஓய்வுக்காலத் தொகையின் உச்ச வரம்பு அதிகரிக்கப்படும். ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் அது அடிப்படை ஓய்வுக்காலத் தொகையைப் போன்று நான்கு மடங்காக இருக்கும். தற்போது அது மூன்று மடங்காகவுள்ளது.

அதனால் 1958ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு பிறந்த உறுப்பினர்கள் 65 வயதை அடைந்த பின்னர் ஓய்வுக்காலக் கணக்கிலிருந்து 20 விழுக்காடு வரை மீட்டுக்கொள்ளலாம். அவர்கள் ஓய்வுக்காலக் கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் பெறக்கூடிய தொகையும் அதிகரிக்கக்கூடும்.

- முழு ஓய்வுக்காலத் தொகை நிரப்பப்பட்ட பிறகு எஞ்சிய தொகையைச் சேமிக்கலாம் அல்லது முதலீடு செய்யலாம்:

முழு ஓய்வுக்காலக் கணக்கு நிரப்பப்பட்ட பிறகு எஞ்சிய தொகையைத் தற்போது சிறப்புக் கணக்கில் தொடர்ந்து வைத்திருக்கலாம். ஆனால், அடுத்த ஆண்டு முதல் அந்தத் தொகை மீண்டும் சாதாரணக் கணக்கிற்கு மாற்றப்படும்.

அந்தத் தொகையைச் சாதாரணக் கணக்கில் ஐந்தரை ஆண்டு வரை வைத்திருக்கலாம். அல்லது அதில் ஒரு பகுதியைக் கூடுதல் வட்டி தரக்கூடிய நிலையான வைப்பு நிதியில் (fixed deposit) சேமிக்கலாம். உறுப்பினர்கள் விரும்பினால், அந்தத் தொகையை முதலீட்டிற்காகவும் பயன்படுத்தலாம். ஆனால், அதிலுள்ள சாதக பாதகங்களை நன்கு அறிந்து செயல்படுமாறு நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்