CPF இன்றும் பொருத்தமாகவே உள்ளது: மூத்த அமைச்சர் லீ

CPF
முற்றிலும் 'சரியான' மத்திய சேமநிதி முறை என்று ஒன்று இல்லை; அதே வேளையில் அதன் சுயசார்புக் கொள்கை இன்னமும் பொருத்தமானதாகவே உள்ளது என்று மூத்த அமைச்சர் லீ சியென் லூங் (Lee Hsien Loong)கூறியுள்ளார்.
குறைந்த வருமான ஊழியர்கள், ஊழியரணியில் இல்லாதவர்கள் போன்றவர்களுக்கு அரசாங்கம் குறிப்பிட்ட ஆதரவுகளை வழங்கும் என்றார் திரு லீ.
சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுள் நீள்வதால் மத்திய சேமநிதியின் சுயசார்புக் கொள்கை எப்போதும்போல இப்போதும் பொருந்தும்;
சமூகத்தின் தேவைகளும் வேலைச்சூழலும் மாறிவரும் வேளையில் அரசாங்கம் அதற்கேற்ப மாற்றங்களைச் செய்ய வேண்டும்;
புதிய தலைமுறைக்கு ஏற்ப மத்திய சேமநிதி முறை மாற்றம் காணவேண்டும் என்று திரு லீ கேட்டுக்கொண்டார்.
மத்திய சேமநிதியின் 70 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் Our Tampines Hub-இல் புத்தகம் வெளியிடப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் லீ பேசினார். மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் (Tan See Leng) அதில் கலந்துகொண்டார்.
Plan Life Ahead, Now! எனும் புதிய வழிகாட்டித் தளமும் அறிமுகம் கண்டது.
மத்திய சேமநிதி உறுப்பினர்கள் அதில் தங்கள் வசதிக்கேற்ப இணையப் பக்கத்தை அமைத்துக்கொள்ளலாம்.