Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மத்தியச் சேமநிதித் திட்டத்தின்கீழ் 68 மில்லியன் வெள்ளி மானியத்தை 117,000 பேருக்கு வழங்கியுள்ளது அரசாங்கம்

வாசிப்புநேரம் -

மத்தியச் சேமநிதி ஓய்வுக்காலச் சேமிப்புத் திட்டத்தின்கீழ் அரசாங்கம் 68 மில்லியன் வெள்ளி  மானியத்தை 117,000 உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு உறுப்பினர்கள் தத்தம் கணக்குகளில் நிரப்பிய தொகைக்கு ஈடாக அந்த மானியம் வழங்கப்பட்டது.

10இல் 9 உறுப்பினர்கள் அதிகபட்ச மானியமாக 600 வெள்ளியைப் பெற்றனர்.

அந்த மானியம் இம்மாதம் 7ஆம் தேதி நிரப்பப்பட்டதாக மத்திய சேமநிதிக் கழகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

அடிப்படை ஓய்வுக்காலத் தொகையை எட்டாத மூத்தோருக்கு உதவ கடந்த ஆண்டு மத்தியச் சேமநிதி ஓய்வூதியத் கணக்கில் தொகை நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டது.

அதற்குத் தகுதி பெறுவோர் ஒவ்வோர் ஆண்டும்  மதிப்பிடப்படுகின்றனர்.

அதற்காக விண்ணப்பம் செய்யத் தேவையில்லை.

இவ்வாண்டு திட்டத்துக்குத் தகுதிபெறும் 435,000 உறுப்பினர்களில் 35,000 பேர் முதன்முறையாக மானியத்தைப் பெறவிருக்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்