Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிரேசிலில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் Seatrium நிறுவனம் மீது விசாரணை

வாசிப்புநேரம் -
பிரேசிலில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் கடல் பொறியியல் நிறுவனமான Seatriumஐ விசாரிப்பதாக சிங்கப்பூரின் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு இன்று (31 மே) கூறியுள்ளது.

Sembcorp Marine நிறுவனமும் Keppel நிறுவனமும் இணைக்கப்பட்டு Seatrium நிறுவனம் இவ்வாண்டு உருவாக்கப்பட்டது.

"Seatrium Limited நிறுவனம் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறோம்," என லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு சொன்னது.

தற்போது அதனால் மேல்விவரங்கள் கொடுக்க இயலாது
என்றும் அது தெரிவித்தது.

ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அஞ்சாமல் விசாரணை நடத்தப்படும் என்றும் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு உறுதியளித்தது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்