சிங்கப்பூர் செழிக்க "நாம்" எனும் ஒன்றுபட்ட உணர்வு அவசியம்: அதிபர் தர்மன்
(படம்: CNA/Syamil Sapari)
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் செழித்தோங்க ‘நான்’ என்பதைக் காட்டிலும் ‘நாம்’ எனும் ஒன்றுபட்ட உணர்வு அவசியம் என்பதை அதிபர் தர்மன் சண்முகரத்னம் வலியுறுத்தியிருக்கிறார்.
பயன்மிக்க திட்டங்களைக் குடிமக்கள் தாங்களாகவே வழிநடத்த கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும்.
தொண்டூழியத்தை ஒரு வாழ்க்கைமுறையாகவே உருவாக்குவதன்மூலம் சிங்கப்பூரர்கள் இடையே ஒன்றுபட்ட உணர்வு வலுவாகும்.
மேலும் வெளிப்படையான, ஈடுபாடு கொண்ட சமூகத்தை உருவாக்குவது சிங்கப்பூரின் அடையாளமாகத் திகழும் ஒற்றுமையை ஆழப்படுத்தும் என்று அதிபர் தர்மன் சொன்னார்.
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதை சிங்கப்பூரர்கள் தொடரவேண்டும் என்றார் அதிபர்.