அருகிவரும் காட்டுப்பூனைகள்...சாங்கியில்
படம்: Facebook/NParks
சிங்கப்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட அருகிவரும் காட்டுப்பூனைகள் சாங்கியிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படவிருக்கின்றன.
சாங்கி பகுதியில் ஏறக்குறைய 9 மாதங்களாகத் தொண்டூழியர்கள் கேமராக்களை வைத்து கண்காணித்ததில் குறைந்தது 3 பூனைகளும் 2 பூனைக்குட்டிகளும் அங்கு வசிப்பது தெரிய வந்தது.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் காட்டுப்பூனைகளை இடம் மாற்றுவதற்கான பணிகள் தொடங்கும்.
அதற்கு முன்பாகப் பூனைகள் மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
Mainland Leopard Cat ரகக் காட்டுப்பூனைகள் அருகிவரும் உயிரினங்களில் ஒன்று.
சிங்கப்பூரில் 50க்கும் குறைவாகவே உள்ளன.
சரியான, பாதுகாப்பான சூழல் அமைந்தால் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.