சிங்கப்பூரின் சாலையில் முதலை
Facebook/Koo Guan Heng
This audio is generated by an AI tool.
லிம் சூ காங் (Lim Chu Kang) வட்டாரத்தில் சாலையில் ஒரு முதலை காணப்பட்டுள்ளது.
அது எங்கிருந்து வந்தது என்று இணையவாசிகள் பலர் கேள்வி எழுப்பினர்.
சாலையில் முதலை கிடப்பதைக் காட்டும் படம் ஒன்று Facebookஇன் Singapore Wildlife Sightings பக்கத்தில் நேற்று (18 மார்ச்) பதிவேற்றம் செய்யப்பட்டது.
முதலை லிம் சூ காங்கில் இருந்திருக்கும் என்றும் அங்கு ஒரு முதலைப் பண்ணை உள்ளது என்றும் இணையவாசிகள் கூறினர்.
கூகள் வரைபடத்தின்படி படம் எண். 321 நியோ தியூ கிரசென்ட்டில் (Neo Tiew Crescent) எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அருகில் Long Kuan Hung முதலைப் பண்ணை அமைந்திருக்கிறது.
பண்ணையிலிருந்து முதலை தப்பித்திருக்கலாம் என்றும் அதுவே சாலையில் காணப்பட்டிருக்கலாம் என்றும் இணையவாசிகள் சிலர் கருத்துரைத்தனர்.