Skip to main content
செந்தோசா கடலில் மீண்டும் முதலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

செந்தோசா கடலில் மீண்டும் முதலை

வாசிப்புநேரம் -
செந்தோசா கடலில் மீண்டும் முதலை

(படம்: X/SG FULL Mika)

செந்தோசாவின் (Sentosa) சிலோசோ (Siloso), பலவான் (Palawan), தஞ்சோங் (Tanjong) ஆகிய கடற்கரைகளில் நீர்விளையாட்டு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

செந்தோசா கோவுக்கு (Sentosa Cove) அப்பால் உள்ள கடலில் முதலை காணப்பட்டதால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இரண்டாவது முறையாக அதே பகுதியில் முதலை காணப்படுகிறது.

சென்ற வாரம் கெப்பல் பே (Keppel Bay) வட்டாரத்துக்கு அப்பால் கடலில் ஒரு முதலை காணப்பட்டது.

முதலையைத் தேடும் பணி தொடர்கிறது.

கடற்கரைப் பகுதிகளில் சுற்றுக்காவலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் பாதுகாப்பு அறிவிப்பை மதித்து நடக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்