செந்தோசாவில் தென்பட்ட முதலை கொல்லப்பட்டது
வாசிப்புநேரம் -
(படம்: X/SG FULL Mika)
செந்தோசா கோவ் பகுதியில் நேற்று காணப்பட்ட முதலை பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது.
தேசியப் பூங்காக் கழகம் அதனைத் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு சுமார் 9 மணிக்கு முதலை பிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது என்று கூறப்பட்டது.
சுங்கை பூலோ (Sungei Buloh) சதுப்புநிலப் பூங்காவில் ஏற்கனவே சுமார் 20 முதலைகள் உள்ளதால் பிடிக்கப்பட்ட முதலையை அங்கு இடம் மாற்ற முடியவில்லை எனக் கழகம் சொன்னது.
மண்டாய் வனவிலங்குக் குழுமமும் முதலையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
சுமார் 2 மீட்டர் நீளமுள்ள முதலையைப் பாதுகாப்பாக இடம் மாற்ற வழி இல்லாததால் அதைக் கொல்ல முடிவு எடுக்கப்பட்டது என்று கழகம் சொன்னது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் சிங்கப்பூர் கடல் பகுதிகளில் சுமார் 30 முறை முதலைகள் தென்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi