சிங்கப்பூர் இந்தியப் பெண்களின் மனநலம்: எப்படி உதவி கேட்பது?
மனநலப் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு, அண்மை ஆண்டுகளில், சிங்கப்பூரர்களிடையே அதிகரித்துள்ளது.

(படம்: Pixabay)
#CelebratingSGWomen
மனநலப் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு, அண்மை ஆண்டுகளில், சிங்கப்பூரர்களிடையே அதிகரித்துள்ளது.
அதற்கான உதவியும் எளிதில் கிடைக்கிறது.
இருப்பினும், சில பெண்கள் எப்படி உதவி கேட்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
அதற்கு முதலில், இந்தியப் பெண்கள் மனம்விட்டு தைரியமாகப் பேச வேண்டும் என்கிறார் மூத்த குடும்ப நல ஆலோசகர் திருமதி லக்ஷ்மி அழகப்பன்.
அவ்வாறு அவர்கள் முன்வரும்போது, பிறர் தோள் கொடுக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
உதவி உண்டு என அவர்களுக்கு உத்தரவாதம் அளியுங்கள். தேவையான தகவல்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
ஆனால், ஒருபோதும் அவர்களை இழிவுபடுத்துவதோ அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதையோ தவிர்த்துவிடுங்கள்.
நிபுணத்துவ உதவியை நாடுமாறு அவர்களை ஊக்குவியுங்கள்.
உதவி என்பது வீட்டிலேயே தொடங்கலாம் என்கிறார் மனநல ஆலோசகர் குமாரி பிரியாநிஷா.
நம்பிக்கையான நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
சாதாரண உரையாடல்கள் கூட தினசரி ஏற்படக்கூடிய மன உளைச்சலைப் போக்க உதவலாம்.
ஆனால், பிரச்சினை கடுமையாக இருந்தால், அடிப்படை சிகிச்சைக்காக மருந்தகங்களை நாடலாம். அங்கிருந்து மருத்துவமனைக்குச் செல்ல பரிந்துரைகளைப் பெறலாம்.
என்று அவர் கூறினார்.
மனநலப் பிரச்சினைகளால் அவதிப்படுவோருக்கு உதவ அவசரத் தொலைபேசி எண்களும் இருப்பதைக் குமாரி பிரியாநிஷா சுட்டினார்.
National Care எண்: 1800 202 6868
Mental ACT எண்: 96193531 / 97769067
வீட்டில் உதவி தொடங்கவேண்டும் என்றபோதும், ஒரு சமுதாயமாக பெண்களின் மனநலத்தை மேம்படுத்த நாம் என்ன செய்ய முடியும்? அடுத்த வாரம் பார்ப்போம்....