Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் இந்தியப் பெண்களின் மனநலம்: எதனால் மனநலப் பிரச்சினைகள்?

சிங்கப்பூர் வீடுகளில், கணவர்களைவிட இன்னமும் மனைவிகளே சமைப்பது, சுத்தம் செய்வது, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது ஆகியவற்றை அதிகம் செய்வதாக அண்மையில் வெளிவந்த IPSOS ஆய்வு கூறுகிறது.

வாசிப்புநேரம் -

#CelebratingSGWomen

சிங்கப்பூர் வீடுகளில், கணவர்களைவிட இன்னமும் மனைவிகளே சமைப்பது, சுத்தம் செய்வது, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது ஆகியவற்றை அதிகம் செய்வதாக அண்மையில் வெளிவந்த IPSOS ஆய்வு கூறுகிறது.

பெண்கள் என்றால் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு, குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற பாலின நிலைப்பாடு நம் இந்தியச் சமுதாயத்தில் இன்னமும் மேலோங்கி உள்ளது.

அந்த எதிர்பார்ப்பே, இந்தியப் பெண்களிடையே மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார் மூத்த குடும்ப நல ஆலோசகர் திருமதி லக்ஷ்மி அழகப்பன்.

அதைத் தவிர்த்து, திருமணத்தில் சிக்கல்கள், வாழ்க்கையில் தோல்விகள், சர்ச்சை, குடும்ப வன்முறை, நிதிச் சுதந்திரம் ஆகியவையும் சில காரணங்களாக இருக்கலாம் என்றார் அவர்.

மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்?

  • சிறு வயதில் ஏற்பட்ட அதிர்ச்சியான சம்பவங்கள்
  • மனநலச் சவால்களை எப்படிக் கையாள்வது என்பது பற்றித் தெரியாமல் இருப்பது
  • உதவி கேட்க பயம்

என்கிறார் மனநல ஆலோசகர் குமாரி பிரியாநிஷா.

ஆனால், குறிப்பாக இந்தியப் பெண்கள் எதிர்நோக்கக்கூடிய மனநலப் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பிட்ட ஆராய்ச்சி ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.

எனினும், தமது அனுபவத்தில், இந்தியப் பெண்களைவிட ஆண்களே நீண்ட கால மனநலச் சவால்களால் அவதிப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைக் காலங்களில், ஆண்களோடு ஒப்பிடுகையில், அதிகமான பெண்கள் தங்கள் மனநலம் தொடர்பில் உதவி பெற முன்வருவதாகவும் குமாரி பிரியாநிஷா தெரிவித்தார்.

மனநலப் பிரச்சினைகளுக்கு உதவி நாடுவது எப்படி? மேல் விவரங்கள்... அடுத்த வாரம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa