10 காசுத் திட்டத்தில் மாற்றம்
வாசிப்புநேரம் -
பானக் கலன்களைத் திருப்பிக்கொடுக்கும் திட்டத்தில் பங்கேற்கும் கடைகளில் அமர்ந்து உணவருந்தும் வாடிக்கையாளர்களிடம் 10 காசு வைப்புத்தொகை வசூலிக்கப்படமாட்டாது.
அந்தக் கடைகள் பானங்களைக் குவளைகளில் ஊற்றி வாடிக்கையாளர்களிடம் கொடுக்கலாம்.
பானத்தைக் குடித்து முடித்தபிறகு வாடிக்கையாளர்கள் விட்டுச்செல்லும் காலிக் கலன்களைக் கடைக்காரர்கள் சேகரிக்கலாம்.
கலன்களைத் திரும்பக் கொடுத்தால் காசு கொடுக்கும் இயந்திரங்கள் உணவங்காடி நிலையங்களுக்கு அருகிலேயே அமைக்கப்படவுள்ளன.
திட்டத்தில் பங்கேற்கும் உணவு, பானக் கடைகளைக் குறிப்பிட்ட ஒட்டுவில்லை மூலம் மக்கள் அடையாளம் காணலாம்.
அக்கடைகளில் பானங்களை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் 10 காசு வைப்புத்தொகை செலுத்தத் தேவையில்லை.
நடைமுறையை மேலும் எளிதாக்கக் கடைகளுக்கு ஒருமுறை 500 வெள்ளி நிதியாதரவு வழங்கப்படும்.
திட்டம் வெற்றிபெற சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு கேட்டுக்கொண்டது.

ஆதாரம் : Mediacorp Seithi