Skip to main content
ஊழியர்கள் கவனத்திற்கு!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஊழியர்கள் கவனத்திற்கு! - இணையக் குற்றச்செயல்களைத் தடுப்பது எப்படி?

வாசிப்புநேரம் -
ஊழியர்கள் எவ்வாறு இணையச் குற்றச்செயல்களைத் தடுக்கலாம் என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு பகிர்ந்துள்ளது.

1. மின் வழிப்பறி (Phishing)

⚠️ சந்தேகத்திற்குரிய இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.

2. கடவுச்சொல்

✅ சம்பந்தமற்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

✅12 எழுத்துகள் இருக்க வேண்டும்.

✅ ஆங்கிலத்தில் Upper case, Lower case எனும்
பெரிய எழுத்து, சிறிய எழுத்து இரண்டையும் கொண்டிருக்க வேண்டும்.

✅ எண்களையும் சிறப்பு எழுத்துக்களையும் சேர்த்துக் கொள்ளவும்.

3. சாதனங்கள்
  • மின்னியல் சாதனங்கள் தொலைந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.
  • மென்பொருளையும் (software) நச்சுநிரல் எதிர்ப்பு (anti-virus) மென்பொருளையும் ஆக அண்மைப் பதிப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்.
  • பாதுகாப்பான இணையத் தொடர்பைப் பயன்படுத்த வேண்டும்.
4. இணையக் குற்றச்செயல்
  •  சிறிய இணையச் சிக்கல் ஏற்பட்டாலும் உடனே தெரிவிக்க வேண்டும்.
5. வர்த்தகத் தகவல்

✅ தொழில் சார்ந்த முக்கிய தகவல்களைப் பாதுகாக்க வேண்டும்.

✅ அனுமதியின்றி தகவல்கள் வெளியானதாக சந்தேகமிருந்தால் வழக்குப் பதிவு செய்யவேண்டும்.

6. வெளியிடங்களில் வேலை செய்யும்போது...
  •  திரையில் இருப்பதை மற்றவர்கள் பார்த்துவிடாமல் பாதுகாக்கவேண்டும்
  •  Encryption எனப்படும் தகவல்களைக் குறியீடுகளாக்கிப் பாதுகாக்கும் அம்சத்தைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு VPN போன்ற அம்சங்களைப் பயன்படுத்தலாம்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்