Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடந்த ஆண்டு விரைவுச்சாலையில் சைக்கிளோட்டிப் பிடிபட்டவர்கள் 172 பேர்

வாசிப்புநேரம் -
விரைவுச்சாலையில் சட்டவிரோதமாகச் சைக்கிளோட்டிய 172 பேர் கடந்த ஆண்டு பிடிபட்டனர்.

மின்சைக்கிள்கள், தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியோரும் அதில் அடங்குவர்.

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதி குறைந்துள்ளது.

எனினும் சட்டவிரோதமாகச் சைக்கிளோட்டும் சம்பவங்கள் கிருமிப்பரவல் காலத்துக்கு முன்பிருந்ததைவிட 17 மடங்கு உயர்ந்துள்ளன.

சிங்கப்பூரில் விரைவுச்சாலையிலும் சாலைச் சுரங்கப்பாதைகளிலும் சைக்கிளோட்டுவது சட்டவிரோதம்.

அதனைத் தெரிவிக்கும் பல அறிவிப்புகளை நிலப் போக்குவரத்து ஆணையம் விரைவுச்சாலை நுழைவாயில்களில் பொருத்தியுள்ளது.

சட்டவிரோதமாக அங்கு நுழைவோர் பிடிபட்டால் 150 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஏதேனும் நடந்தால் சைக்கிளோட்டிமீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவும் வாய்ப்புண்டு.

அத்தகையோருக்கு 1,000 வெள்ளி வரை அபராதம்;

அல்லது 3 மாதச் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குழுக்களாகச் சைக்கிளோட்டுவோர் பாதையை முன்கூட்டியே திட்டமிட்டுப் பயணம் செய்கின்றனர். அதனால் விரைவுச்சாலைகளுக்குள் நுழையும் வாய்ப்பு குறைவு.

தனியாக ஓட்டுவோர் பாதை மாறிச்செல்ல அதிக வாய்ப்புள்ளதாக சைக்கிளோட்டக் குழுக்கள் கூறுகின்றன.

சைக்கிளோட்டிகள் சொந்தப் பாதுகாப்புக்காகவும் மற்றவரின் பாதுகாப்புக்காகவும் நடப்பில் இருக்கும் விதிகளைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நினைவுபடுத்துகிறது.

 
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்