Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்த பெண்கள் - தென்கிழக்காசியாவில் ஒலிப்பதிவு நிறுவனத்தின் தலைவராகிய முதல் பெண் #CelebratingSGWomen

1950கள், 1960கள், சிங்கப்பூரின் உள்ளூர் இசைத் துறை செழித்திருந்த காலக்கட்டம்.

வாசிப்புநேரம் -

1950கள், 1960கள், சிங்கப்பூரின் உள்ளூர் இசைத் துறை செழித்திருந்த காலக்கட்டம்.

வானொலி, தொலைக்காட்சி என எங்கும், எதிலும் பாடகர்கள், இசைக் குழுக்கள்.

அப்போது இசைத் துறையில், ஒரு முக்கிய பங்கு வகித்தவர் டெய்சி தேவன் (Daisy Devan).

1957ஆம் ஆண்டில், தென்கிழக்காசியாவிலேயே ஒலிப்பதிவு நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்ற முதல் ஆசியப் பெண் என்ற சாதனையைப் புரிந்தார் அவர்.

EMI நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளைக்குத் தலைவராக இருந்த அவர், எந்த இசைக் குழுக்கள், பாடகர்களுக்கு வாய்ப்பளிப்பது, அவர்கள் எந்தப் பாடல்களைப் பாடவேண்டும் ஆகிய முக்கிய முடிவுகளை எடுத்தார்.

1960களில், அனிதா சராவாக் (Anita Sarawak), The Quests ஆகிய கலைஞர்களின் இசைத்தட்டுகளை வெளியிட்டு, அவர்கள் புகழ்பெற உதவியவர் டெய்சி.

1928இல் பிறந்த அவர், முதலில் ரப்பர் விநியோக அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.

ஒலிப்பதிவு நிறுவனப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 6 மாதப் பயிற்சிக்காகப் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டார்.

பின், தென்கிழக்காசியாவிற்கு இசைத்தட்டுகளை உற்பத்தி செய்த, இந்தியாவில் உள்ள, EMI நிறுவனத்தின் ஆகப் பெரிய உற்பத்தித் தளத்திற்குச் சென்று அதில் உள்ள நுணுக்கங்களைக் கற்றார்.

சிங்கப்பூர் திரும்பியதும், சிங்கப்பூரின் முதல் இசைத் தட்டு உற்பத்தி ஆலையை ஜூரோங்கில் தொடங்கினார் டெய்சி.

சிங்கப்பூர் தேசிய கீதத்தின் அசல் ஒலிப்பதிவுக்கான நிர்வாகத் தயாரிப்பாளரும் டெய்சி தான்.

EMI லாப நோக்கத்துடன் செயல்படும் நிறுவனமாக இருந்தாலும், உள்ளூர் இசை மரபுடைமையைப் பாதுகாக்கும் முயற்சியிலும் டெய்சி ஈடுபட்டார்.

2009ஆம் ஆண்டில், 81 வயதில் டெய்சி காலமானார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்